பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 1 மணிக்கு மேல் திறந்து இருந்த கேளிக்கை விடுதிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த விவகாரத்தில் கே.ஆர்.புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நந்தீஷ் தனது பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை பணி இடைநீக்கம் செய்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நந்தீஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நந்தீசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நந்தீசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதாவது நந்தீஷ் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.