உத்தரபிரதேசத்தில் போலீசுக்கு துப்பு கொடுப்பவர் குத்திக்கொலை

போலீசுக்கு துப்பு கொடுக்கும் உளவாளியாக இருந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-01 23:27 GMT

அலிகார்,

உத்தரபிரதேசத்தின் அலிகார் பழைய நகர் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் என்பவரை நேற்று முன்தினம் இரவு மபஸ்பூரை சேர்ந்த ஷெரீப் என்பவர் சாலையோர மதுக்கடைக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் மேலும் 2 பேரும் இணைந்து கொண்டனர்.

அங்கு வைத்து திடீரென நூருல் ஹசனை அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று விட்டு தப்பி ஓடினர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்ட நூருல் ஹசன், போலீசுக்கு துப்பு கொடுக்கும் உளவாளியாக இருந்துள்ளார். எனவே அவர் மீதான பகையால் இந்த சம்பவம் நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது. கொலைாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்