சிபிஐ சோதனைக்கு எதிர்ப்பு: மனிஷ் சிசோடியா வீடு முன் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-19 08:18 GMT

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியா வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஐ சோதனை நடைபெற்று வரும் மனிஷ் சிசோடியா வீட்டின் முன் குவிந்த ஆம் ஆத்மியினர் சிபிஐ, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்