நவீன கேமரா மூலம் போலீசார் சோதனை ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது
நவீன கேமரா உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி ஸ்கூட்டர் திருடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு உப்பார் பேட்டை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தன்வந்திரி ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த சோதனைக்காக நவீன கேமராவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. நவீன கேமரா மூலமாக அந்த ஸ்கூட்டர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி கோரமங்களாவில் உள்ள ஒரு வீட்டு முன்பு திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போக்குவரத்து போலீசார் கைது செய்தாா்கள். அவரிடம் இருந்து ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது உப்பார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.