தெலுங்கானாவில் நஞ்சான உணவு; 27 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் நஞ்சான உணவை சாப்பிட்ட 27 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-09-20 09:45 GMT


அடிலாபாத்,



தெலுங்கானாவின் அடிலாபாத் நகரில் ககா நகரில் சிறுபான்மையின மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு மாணவர்கள் நேற்றிரவு உறங்க சென்றுள்ளனர்.

எனினும், அவர்களில் 27 பேருக்கு திடீரென குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையும் செய்து வருகிறோம் என மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபாகர் ரெட்டி கூறியுள்ளார்.

32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் நகர மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஆள் பற்றாக்குறையால் அரிசி மற்றும் தானியங்களை கழுவாமல் அப்படியே சமையல்காரர் போட்டு சமைத்து உள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் நகரில், கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் படித்து வரும் 38 மாணவர்கள், கடந்த ஞாயிற்று கிழமை மருத்துவ முகாமுக்கு சென்று விட்டு திரும்பியபோது, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது என தெரிவித்தனர். தவறான மருந்துகளை தங்களுக்கு கொடுத்து விட்டனர் என மாணவிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்