பெங்களூரு- மைசூரு இடையேயான விரைவுச்சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது
பெங்களூரு,
பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.