பணப்பற்றாக்குறைவால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் - பிரதமர் மோடி
பணப்பற்றாக்குறைவால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
ஜெய்ப்பூர்,
ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு விழாவில் பிரதமர் மோடி கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:-
ராஜஸ்தான் நிலம் அதன் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது.நாட்டில் தொடங்கியுள்ள விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு மகாகும்பத் தொடர்,
ஒரு பெரிய மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். சன்சாத் விளையாட்டுப் போட்டியின் மூலம் ராஜ்யவர்தன் ரத்தோர் திரும்பி வருவது இளம் தலைமுறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜஸ்தான் பல விளையாட்டு திறமைகளை நாட்டுக்கு வழங்கி உள்ளது. பதக்கங்களை வென்று மூவர்ணத்தின் பெருமையை மேம்படுத்தி உள்ளனர். ஜெய்ப்பூர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை எம்.பி.யாகவும் தேர்வு செய்தது.
பணப்பற்றாக்குறைவால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் மாவட்ட அளவில் விளையாட்டுத்துறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.