பிரதமர் மோடி உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தவில்லை - வெளியான தகவல்

பிரதமர் மோடிக்கு அரசு செலவிடும் தகவல் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது;

Update: 2022-09-01 08:43 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தி கொள்ளவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அரசு செலவிடும் தகவல் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில்,

2014ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் மோடி, தனது உணவு செலவுக்கு அரசு பணத்தை பயன்பத்தி கொள்ளவில்லை என்றும், அவரது சொந்த பணத்தில் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக கூறப்பட்டுள்ளது. பிரதமரின் உணவுக்காக அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்றதுடன், அவர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணி துறை மூலம் பராமரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்