கர்நாடக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்!

கர்நாடக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடுகிறார்.

Update: 2023-04-27 04:17 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடுகிறார். பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக 58,112 பூத்களில் கர்நாடக பாஜக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்