பிரதமர் மோடி பிறந்தநாள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஐதராபாத்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
"விண்ணுலகில் சந்திராயன்,ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கி சுய சார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான,வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர்,
மகளிர்,குழந்தைகள்,இளைஞர்கள் அனைவரும் நலம் வாழ திட்டம் தீட்டிய தலைவர், ஏழை,எளிய மக்களின் நலன் காக்கும் தலைவர், அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாரதப்பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும்,பூரண நலத்துடனும் வாழ்ந்து நீண்ட நெடுங்காலம் பாரத தேசத்தையும்,பாரத மக்களையும் வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.