நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!

நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-11 04:24 GMT

புதுடெல்லி,

ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- "அமிதாப் பச்சன் ஜிக்கு 80-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர் இவர். நீண்ட நாள் நல்ல உடல் நலத்துடன் நீங்கள் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" இவ்வாறு மோடி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்