ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ராஜஸ்தானின் சிகாரில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 14வது தவணை தொகையான சுமார் ரூ. 17,000 கோடியை விடுவிப்பது உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்மாநிலத்தில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் ., மேலும் ரூ.860 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். 28-ந்தேதி காந்திநகரில் 'செமிகான் இந்தியா 2023' உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.