சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்கிறார். அங்கு அவர் ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஆறு வழி பாதை உள்பட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன் பின்னர் ராய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன் பின்னர் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.