இன்று தேசிய வாக்காளர்கள் தினம்: இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5 ஆயிரம் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமருடனான உரையாடலில் இணைகிறார்கள்.

Update: 2024-01-24 20:31 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தேசிய வாக்காளர்கள் தினம் இன்று (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடுவார் என பா.ஜனதா இளைஞர் அணி அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் தேஜஸ்வி சூர்யா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "3-வது முறையாக மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் அவர்கள் (இளம் வாக்காளர்கள்) மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இளைஞர்களுக்கு இணையற்ற வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி இளம் வாக்காளர்களுடன் பேசுகிறார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,000 இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமருடனான உரையாடலில் இணைவார்கள். ஒரு பிரதமர் இளம் வாக்காளர்களுடன் இவ்வளவு அளவில் உரையாடுவது இதுவே முதல்முறை என்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது அவர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் ஜனநாயக வேர்களை ஆழப்படுத்தும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்