இன்று குஜராத் செல்கிறாா் பிரதமா் மோடி
குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.;
காந்திநகர்,
குஜராத்தில் நடைபெற உள்ள 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அதற்காக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
நவ்சாரியில் நடைபெற உள்ள 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதனை தொடர்ந்து அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைமையகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.