கர்நாடகத்தில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை; பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-02-05 05:27 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பெங்களூருவில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்