4 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஜோபைடன் அடுத்த மாதம் நடத்தும், 4 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Update: 2022-06-15 19:29 GMT

Image Courtacy: PTI

வாஷிங்டன்,

இந்தியா, இஸ்ரேல், அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து புதிய குழு (ஐ2யு2) ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த புதிய குழுவின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறுகிறது.

காணொலி முறையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நடத்துகிறார். ஜூலை 13 முதல் 16-ந்தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளில் அவர் பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி, அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் உணவு பாதுகாப்பு நெருக்கடி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்