21 தீவுகளுக்கு இன்று பெயர்சூட்டும் விழா: பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டுகிறார் பிரதமர் மோடி

21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சூட்டுகிறார்.;

Update: 2023-01-22 18:49 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடிசூட்டுகிறார்.

2018 ஜனவரி வரை 21 பேர் பரம் வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும், ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

அந்தமானின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் வைத்து நிக்கோபார் தீவுகள் மற்றும் நேதாஜியின் நினைவைப் போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு தீவுக்குச் சென்ற பிரதமரால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவுகள் ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டன.

21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக பிரதமர் அலுவகம் தனது அறிக்கையில், "நாட்டின் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு உரிய மரியாதை அளிப்பது எப்போதுமே பிரதமரால் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த மனப்பான்மையுடன் முன்னோக்கிச் சென்று, தீவுக் குழுவில் உள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு இப்போது பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்