நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் - போர் பதற்றத்தை தணிக்க வலியுறுத்தல்

நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-08-16 15:49 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த உரையாடலின்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். அவரிடம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். மேலும் பணயக்கைதிகளின் விடுதலை, போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதன் அவசியம் குறித்து விவாதித்தோம்" என்று பதிவிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்