ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் மோடி
ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல்முறையாக திரௌபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்
புதுடெல்லி,
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில்,ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல்முறையாக திரௌபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.