பாஜக ஆளும் முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழா 2 கட்டங்களாக நடைபெற்றது. காலையில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
அதையடுத்து நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். . அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பாஜக ஆளும் முதல் மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பிரதமரின் 9 ஆண்டு கால ஆட்சியை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.