4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

Update: 2023-06-20 01:59 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார்.நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடக்கும் யோகா கொண்டாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

மற்றவர்களுடன் சேர்ந்து யோகா செய்கிறார்.22-ந் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், ஜோ பைடனும், ஜில் பைடனும் விருந்து அளிக்கிறார்கள்.ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதே நாளில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 23-ந் தேதி, வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்