குஜராத் மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

குஜராத் மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-03-10 00:17 GMT

கோப்புப்படம்

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலிய பிரதமருடன் பார்த்தார். பின்னர் மாலையில் அவர் தலைநகர் காந்திநகருக்கு சென்றார்.

அங்கு மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல், பொதுச்செயலாளர் ரத்னாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது குஜராத்தில் பா.ஜனதா ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அத்துடன் மாநிலத்தில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் நடந்த அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜ்குமார், முதன்மை செயலாளர் கைலாஷ்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்