8 ஆண்டுகளில் அரசியல் கலாசாரம் மாறியுள்ளது - ஜெ.பி.நட்டா பேச்சு
கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலாசாரம் மாறியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டு நிறைவு கொண்டாட்ட பாடல் வெளியிடப்பட்டது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலசாரம் மாறியுள்ளது. சேவை, நல்லாட்சி, ஏழை நலன் இதுவே மோடி அரசின் செயல்பாடு. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலாச்சாரத்தை மாறியுள்ளார்.
முன்பு இருந்த ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் காகித அளவிலேயே இருந்தன; ஆனால், தற்போதைய ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டிவிடும் இலக்கில் தான் உள்ளது என்றார்.