பொதுவாக நாம் புறந்தள்ள கூடிய விசயங்களை பிரதமர் மோடி பேசி வருகிறார்: திரிபுரா முதல்-மந்திரி

பிரதமர் மோடி சிறிய விசயங்களை பேசுவது போல காணப்பட்டாலும், உற்று நோக்கினால் அது எவ்வளவு அவசியம் வாய்ந்தது என தெரியும் என்று திரிபுரா முதல்-மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-09-25 07:26 GMT


புதுடெல்லி,



பிரதமர் மோடி, மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது.

இதில், சமீபத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்களை (சீட்டா) பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த வானொலி நிகழ்ச்சி பற்றி திரிபுரா முதல்-மந்திரி மாணிக் ஷா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் பல விசயங்களை பற்றி பேசி வருகிறார். அவை சிறிய விசயங்கள் போன்று நமக்கு தோன்றும்.

ஆனால், நாம் அவற்றை உற்று கவனிக்கும்போது, அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பற்றி பேசி வருகிறார் என நாம் உணர முடியும். எடுத்துக்காட்டாக அவர் சைகை மொழியின் வளர்ச்சி பற்றி பேசிய விசயங்களை குறிப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

பொதுவாக நாம் புறந்தள்ள கூடிய விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை பிரதமர் மோடி எடுத்து பேசி வருகிறார் என்றும் மாணிக் ஷா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்