ஏழைகளுக்கு உதவும் வகையில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் - பிரதமர் மோடி

கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை மறுஆய்வு செய்ய ஒன்பது பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.;

Update: 2022-12-04 07:50 GMT

புதுடெல்லி,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் குறித்து நவம்பர் மாதத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு அதிக வசதி படைத்த மாநிலங்களுக்குச் சாதகமாக மாற்றப்பட்டது.ஆனால் ஏழை மாநிலங்களுக்கு தேவையான பங்கு கிடைக்கவில்லை.

நாட்டின் வறுமையை ஒழிக்க கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்  என்று ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்