நாட்டின் ஜனநாயகத்தையும், கண்ணியத்தையும் பிரதமர் மோடி சிதைத்து வருகிறார் - சோனியா கடும் தாக்கு

நாட்டின் ஜனநாயகத்தையும், கண்ணியத்தையும் சிதைத்து வருவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார்.

Update: 2024-04-07 00:52 GMT

கோப்புப்படம் 

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. இதில் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய சோனியா, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக நாடு சிக்கி இருக்கிறது. இன்று நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்படுகின்றன. நமது அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு சதி நடக்கிறது.

எதிர்க்கட்சித்தலைவர்களை பா.ஜனதாவில் இணைய வைக்க பல்வேறு தந்திரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தன்னை மாபெரும் தலைவராக கருதும் மோடிஜி, நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார். இது ஒரு சர்வாதிகாரம் ஆகும். இதற்கு நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்