75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பிரதமர் நரேந்திர மோடி, இன்று 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Update: 2022-10-16 06:16 GMT

புதுடெல்லி,

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என 2022-23- மத்திய பட்ஜெட் உரையில், நிதிமந்திரி அறிவித்திருந்தார்.

அதன் படி, பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்..பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

Tags:    

மேலும் செய்திகள்