பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக ஆதரவுடன் பீகாரின் முதல்-மந்திரியாக இன்று மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

Update: 2024-01-28 13:08 GMT

புதுடெல்லி,

பீகார் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதேபோலவே, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் விலகினார். பின்னர், கவர்னரை சந்தித்த நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது;

"பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் எந்த தடைகளையும் விட்டு வைக்காது.

முதல் மந்திரியாக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், துணை முதல் மந்திரியாக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையிலான அரசு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்