பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் - பிரதமர் மோடி

ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2023-11-10 22:45 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் தமது கவலையை பகிர்ந்துகொண்டனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து பேசிய அவர்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது என நாங்கள் ஒப்புக்கொண்டோம்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்