அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவதா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி வசைபாடுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update:2023-09-15 02:29 IST

புதுடெல்லி,

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியா' கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தான் சிறப்பாக செயல்படும் அவமதிப்பு காரியத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஈடுபட்டுள்ளார். 'இந்தியா' கூட்டணி கட்சிகளை ஆணவ கட்சிகள் என்று கூறியுள்ளார்.

அதை சொல்வது யார் என்று பாருங்கள். எதிர்க்கட்சிகளை வசைபாட அரசு நிகழ்ச்சியை பயன்படுத்துபவர்தான் அதை சொல்கிறார். அவர் அளவுக்கு கீழே இறங்கி, தேசிய ஜனநாயக கூட்டணியை 'கவுதம் அதானி என்.டி.ஏ.' (ஜி.ஏ. என்.டி.ஏ.) என்று நாங்களும் அழைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்