ஐதராபாத்தை "பாக்யாநகர்" என கூறிய பிரதமர் மோடி...!
பாஜக செயற்குழு கூட்டத்தில் ஐதராபாத்தை பாக்யாநகர் என பிரதமர் மோடி பேசியது, ஐதராபாத்தின் பெயர் மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐதராபாத்,
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் தொடங்கி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐதராபாத் நகரத்தை பாக்யாநகர் என குறிப்பிட்டு பேசினார். மேலும், பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார். என கூறினார்.
ஐதராபாத்தை பாக்யாநகர் என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியது, ஐதராபாத்தின் பெயர் மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படுமா? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், இதுகுறித்து அமைச்சர்களுடன் சேர்ந்து முதல்வர் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் ஐதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 2020 -ம் ஆண்டு ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தில் ஐதராபாத் நகரத்தின் பெயரை பாக்யநகர் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.