பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம்

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-06-13 13:09 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. அவருடன் சேர்ந்து 71 மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.கே.மிஸ்ராவை பிரதமரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவரது நியமன உத்தரவு பிரதமரின் பதவிக்காலத்திற்கு இணையாக, அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்