மெக்காவுக்கு புனித பயணம் சென்றஉடுப்பியை சேர்ந்த 2 மூதாட்டிகள் சாவு

மெக்காவுக்கு புனித பயணம் சென்ற உடுப்பியை சேர்ந்த 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

Update: 2023-03-13 04:30 GMT

மங்களூரு-

மெக்கா புனித பயணம்

இஸ்லாமியர்களின் புனித பூமியாக மெக்கா கருதப்படுகிறது. இதனால் மெக்காவுக்கு செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம் மக்களின் கனவாக உள்ளது. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 1-ந்தேதி மெக்காவுக்கு புனித பயணம் நடத்தப்பட்டது.

இதில், 23 பெண்களும், 11 ஆண்களும் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். மெக்காவில் உம்ராவை முடித்துவிட்டு அந்த குழுவினர் மதீனாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

2 மூதாட்டிகள் சாவு

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி அந்த குழுவில் இருந்த உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் அருகே கோட்டாவை சேர்ந்த மரியம்மா (66) என்பவர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி அதே குழுவில் இடம்பெற்றிருந்த மரியம்மாவின் உறவினராக கோட்டாவை சேர்ந்த கதிஜம்மா (68) என்பவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனை கேட்டு உடுப்பியில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இந்த நிலையில் மரியம்மா மற்றும் கதிஜம்மாவின் உடல்களுக்கு மெக்காவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்