தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கிய பன்றி - அதிர்ச்சி வீடியோ
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை பன்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த பன்றி விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை கொடூரமாக தாக்கியது. பன்றி தாக்கியதில் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறி கூச்சலிட்டான்.
சிறுவனின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் பன்றியை விரட்டி சிறுவனை மீட்டனர். ஆனால், பன்றி தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை பன்றி தாக்கிய சம்பவம் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.