ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியீடு
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ser.indianrailways.gov.in என்ற ரெயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.