பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் நோட்டீஸ்
பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு தொடர்பாக விவாதிம் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.;
புதுடெல்லி,
மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிகிறது.
இதேபோன்று, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாகவும் பிரச்சனை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.