இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை - நிபுணர்கள் கணிப்பு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Update: 2022-10-07 10:20 GMT

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் கடந்த 139 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 96.72 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.03 ரூபாய்க்கும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 111.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் தொடரும் என்பதால் கடனுக்கான வட்டி, வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்