25,000 ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

Update: 2024-05-07 11:01 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய கடந்த 2016-ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ததோடு, அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓஎம்ஆர் தாள்கள் மற்றும் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அழிக்கப்பட்டதா என  கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நியமனங்கள் மோசடியானதாக இருந்தால் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். இதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?" எனக் காட்டமாக கேள்வி எழுப்பியது.

Tags:    

மேலும் செய்திகள்