நல்லா வருவீங்க... ஜி-20 மாநாட்டு பூந்தொட்டிகளை ஆடம்பர காரில் திருடி சென்ற நபர்கள் - வைரலான வீடியோ

அரியானாவின் குருகிராம் பகுதியில் ஜி-20 மாநாட்டுக்கு வைத்திருந்த பூந்தொட்டிகளை இருவர் திருடி, தங்களது ஆடம்பர காரில் அள்ளி போட்டு கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.;

Update: 2023-02-28 11:36 GMT



குருகிராம்,


அரியானாவில் வருகிற 1-ந்தேதி ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

அதனால், ஜி-20 சின்னம், பூந்தொட்டிகள் மற்றும் தூய்மையான பகுதிகள், பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட வரவேற்பு பலகைகள் என அந்நகரம் திருவிழாவுக்கான புதுப்பொலிவு பெற்று காணப்படுகிறது.

இந்நிலையில், வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 2 நபர்கள் ஆடம்பர ரக கார் ஒன்றில் வந்து நிற்கின்றனர். அந்த காரில் வி.ஐ.பி. என்பதற்கான பெயரும் இடம் பெற்று உள்ளது. இதன்பின், அவர்கள் ஜி-20 நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பூந்தொட்டிகளை திருடி தங்களது காரில் வைத்து செல்கின்றனர்.

இதுபற்றி வெளியான டுவிட்டர் பதிவில், ஒரு விலையுயர்ந்த காரில் வந்த பணக்கார நபர் குருகிராமில் நடைபெற உள்ள ஜி-20 நிகழ்ச்சிக்காக வைத்திருந்த பூந்தொட்டிகளை திருடி செல்கிறார். அவர், அந்த காரை கூட இதுபோன்ற நேர்மையான விசயங்களை செய்து வாங்கியிருக்க கூடும் என வீடியோவின் தலைப்பாக உள்ளது.

இதுபற்றி குருகிராம் பெருநகர வளர்ச்சி கழகத்தின் இணை தலைமை செயல் அதிகாரியான எஸ்.கே. சஹால் கூறும்போது, எங்களது கவனத்திற்கு இந்த சம்பவம் வந்து உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்