காங்கிரஸ் கட்சியால் வளர முடியாததற்கு காரணம் என்ன? குலாம் நபி ஆசாத் விளக்கம்

காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை என குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

Update: 2022-09-04 10:39 GMT

ஜம்மு,

காங்கிரஸ் கட்சியில் 50 வருடங்களுக்கும் மேல் இருந்த மூத்த அரசியல்வாதி குலாம் நபி ஆசாத், சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். 'ஒரு அரசியல்வாதிக்கான சூட்சுமமும், திறமையும் ராகுல் காந்திக்கு இல்லை' என குலாம் நபி ஆசாத் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகினர். ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி, இப்போது குலாம் நபி ஆசாத் வசமாகிவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து காஷ்மீர் வந்த குலாம் நபி ஆசாத்துக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு அவரது ஆதரவாளர்கள் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். பேரணியை தொடர்ந்து நடக்கும் பொதுக் கூட்டத்தில், குலாம் நபி ஆசாத் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் கொடியையும் பெயரையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானியின் பெயரைச் சூட்டுவேன்.

காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, கணினியால் அல்ல, டுவிட்டரால் அல்ல. அவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள் அவர்களின் அணுகல் கணினிகள் மற்றும் டுவீட்களில் மட்டுமே உள்ளது.

காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை எனறார்.

"காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் இப்போது பஸ்களில் சிறைக்குச் செல்கிறார்கள், டிஜிபி, கமிஷனர்களை அழைத்து, பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வெளியே வந்து விடுகிறார்கள் அதனால்தான் காங்கிரஸால் வளர முடியவில்லை.

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் அவர் முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்