எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த பவன் கல்யாண் - நெகிழ்ச்சி பதிவு

எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-10-06 05:28 GMT

அமராவதி,

ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்' மீது எனக்குள்ள அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. 'அ.தி.மு.க.வின் 53-வது தொடக்க நாளான அக்டோபர் 17-ம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் மொழி ஆசிரியர் மூலம் புரட்சித் தலைவரைப் பற்றி எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவர் திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார்.

"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி."

நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசன், அரசர்களுக்கெல்லாம் விளக்குப் போன்றவன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்