கர்நாடக முதல்-மந்திரியுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு
கர்நாடக முதல்-மந்திரியை ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் வனத்துறை மந்திரி ஈஸ்வர் காந்த்ரே ஆகியோரை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்து பேசினார். பெங்களூருவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களின் நலன், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.