மராட்டியத்தில் பயணிகள் ரெயிலில் தீ விபத்து
மராட்டியத்தில் அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அகமத்நகர்,
மராட்டிய மாநிலத்தில் புதிய அஸ்தி பகுதியிலிருந்து அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.