ஜார்கண்டில் சம்பவம் ஓடும் ரெயிலில் துப்பாக்கியால் சுட்ட பயணி: ரெயில் மாறி ஏறிவிட்டு இருக்கைக்காக தகராறு

ஜார்கண்டில் ஓடும் ரெயிலில் பயணி ஒருவர் சக பயணியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2023-10-13 19:25 GMT

தன்பாத், 

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் அருகே நேற்று முன்தினம் டெல்லியை நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.45 மணி அளவில், ஏ.சி. பெட்டியில் பயணித்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதனால் அந்த பெட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த ரெயில் நிலையத்தில் அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஹர்விந்தர் சிங் (வயது 41) என்றும், முன்னாள் ராணுவ அதிகாரி என்றும் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். ஹவுரா-ராஜதானி டிக்கெட் வைத்துள்ள அவர் சீல்டா-ராஜதானி ரெயிலில் தவறுதலாக ஏறிவிட்டு இருக்கைக்காக டி.டி.ஆர். மற்றும் பயணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போதுதான் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்