நாடாளுமன்ற இல்லம் வெடிக்க செய்யப்படும்; மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. கைது
நாடாளுமன்ற இல்லம் வெடிக்க செய்யப்படும் என மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.வை டெல்லி போலீசின் குற்ற பிரிவு கைது செய்துள்ளது.;
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கிஷோர் சாம்ரைட். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவரான இவர், நாடாளுமன்ற இல்லத்திற்கு பொட்டலம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில் ஜெலாட்டின் குச்சிகள் மற்றும் தேசிய கொடிகள் ஆகியவை இருந்துள்ளன.
அதனுடன், தனது கோரிக்கைகளை வருகிற 30-ந்தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நாடாளுமன்ற இல்லம் வெடிக்க செய்யப்படும் என மிரட்டலும் விடுத்து உள்ளார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்த டெல்லி போலீசின் குற்ற பிரிவு போபால் நகரில் வைத்து அவரை கைது செய்துள்ளது. கடந்த காலத்திலும் சாம்ரைட் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2008-ம் ஆண்டு, பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் விதர்பா தனி மாநிலம் கோரி, தீக்குளிக்க போகிறேன் என கூறி மிரட்டலில் ஈடுபட்டார். இதற்காக பிரதமர் இல்லம் நோக்கி சென்ற அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.