பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடைகொடுக்கிறோம் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது

Update: 2023-09-18 05:30 GMT

டெல்லி,

Full View


Live Updates
2023-09-18 08:09 GMT

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370 நீக்கம், ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்பட வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாலும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கியத்துவும், அதன் சிறப்புகள் எப்போதும் இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்

 

2023-09-18 07:40 GMT

கடந்த காலத்தையும், எதிர்க்காலத்தையும் இணைக்கும் இடத்தில் நாம் இருப்பது பெருமையாக உள்ளது. நாம் புதிய நாடாளுமன்ற கட்டிட்டத்திற்குள் நுழையும்போது நமக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

அனைத்து எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்ற கட்டிடம் குறித்த தங்கள் நினைவுகளை பகிருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

2023-09-18 07:40 GMT

4 எம்.பி.க்களை கொண்ட கட்சி ஆட்சியிலும், 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் இந்ததை இந்த நாடாளுமன்ற கட்டிடம் கண்டுள்ளது - பிரதமர் மோடி

2023-09-18 07:07 GMT

முன்னதாக நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. 

2023-09-18 06:51 GMT

நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்கிறோம். ஆனால், வரும் தலைமுறையினருக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடம் எப்போதும் உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி

2023-09-18 06:44 GMT

நாடாளுமன்ற உறுப்பினராக இந்த கட்டிடத்திற்குள் நுழைந்தபோது மக்களிடமிருந்து இவ்வளவு அன்பை பெறுவேன் என நான் நினைக்கவில்லை - பிரதமர் மோடி

2023-09-18 06:42 GMT

ஜி20 உச்சி மாநாட்டில் கூட்டு பிரகடனம் ஏற்படுவதை இந்தியாவின் சக்தி உறுதிப்படுத்தியது - பிரதமர் மோடி

2023-09-18 06:36 GMT

டெல்லி ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி ஒரு நபருக்கோ, ஒரு கட்சிகோ சார்ந்தது அல்ல. ஒட்டுமொத்த நாட்டின் வெற்றி - பிரதமர் மோடி

2023-09-18 06:27 GMT

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடைகொடுக்கிறோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேய ஏகாதிபத்திய சட்டசபையாக இந்த கட்டிடம் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த கட்டிடம் நாடாளுமன்றமாக அடையாளம் காணப்பட்டது.

இந்த கட்டிடத்தை கட்டும் முடிவை வெளிநாட்டு ஆட்சியாளர்கள் எடுத்தனர் என்பது உண்மை தான். ஆனால், இந்த கட்டிடம் ஒவ்வொரு இந்தியரின் பணத்திலும், கடின உழைப்பிலும் கட்டப்பட்டது என்பதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது - பிரதமர் மோடி

2023-09-18 06:11 GMT

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை முதல் (செப்.19) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

Tags:    

மேலும் செய்திகள்