மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல்: எதிர்க்கட்சி பிரமுகர்கள் தாக்கப்பட்டதாக புகார்

பங்குரா மாவட்டம் சோனாமுகியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. திபாகர் காரமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.;

Update: 2023-06-12 23:51 GMT

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ந் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதற்கு 16-ந் தேதி கடைசிநாள் ஆகும். இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் மையத்துக்கு செல்லும் வழியில், பல்வேறு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பங்குரா மாவட்டம் சோனாமுகியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. திபாகர் காரமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மினாகானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. அக்கட்சி வேட்பாளர் தாக்கப்பட்டார். பஸ்சிம் மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களிலும் மோதல்கள் நடந்தன. இவை குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்