பெண் கலெக்டர் முன் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிய பஞ்சாயத்து தலைவி; வைரலான வீடியோ

ராஜஸ்தானின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்த சோனு கன்வார், மேடையில் இருந்தபடி கலெக்டரை ஆங்கிலத்தில் வரவேற்று பேசினார்.;

Update: 2024-09-17 22:32 GMT

பார்மர்,

ராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தில் கலெக்டராக சமீபத்தில் பணியமர்த்தப்பட்டவர் டினா டாபி. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அவரை அழைத்துள்ளனர். அவரும் அதற்கு ஒப்பு கொண்டார்.

இதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற டினாவை, பஞ்சாயத்து தலைவி சோனு கன்வார் ஆங்கிலத்தில் வரவேற்று பேசினார். ராஜஸ்தானின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்த சோனு, மேடையில் இருந்தபடி கலெக்டரை வரவேற்று பேசினார்.

அவர் பேசும்போது, இந்த நாளின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், நம்முடைய கலெக்டரை நான் வரவேற்கிறேன். ஒரு பெண்ணாக கலெக்டர் டினாவை வரவேற்பது எனக்கு கவுரவம் அளிக்கும் விசயம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, தண்ணீர் பாதுகாப்பு பற்றியும் அவர் பேசினார்.

இதனை கேட்டு கொண்டிருந்த கூட்டத்தினர் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சோனுவின் ஆங்கில திறமையை கண்டு அனைவரும் திகைத்து போனார்கள். கலெக்டர் டினாவும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

2015-ம் ஆண்டு, முதல் முயற்சியிலேயே மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் டினா டாபி தேர்ச்சி பெற்றார். இவருடைய தங்கை ரியா டாபி 2020-ம் ஆண்டில் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 15-வது இடம் பிடித்து ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்