உத்தரகாண்ட் வனப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள் கிடந்ததால் பரபரப்பு
உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
உத்தர்காஷி,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி மாவட்டத்தில் துல்யாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் மற்றும் பேனர்கள் கிடந்தன. வனப்பகுதியில் கிடந்த பலூன்களில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட பேனர்கள் கிடந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். உடனடியாக மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.